0
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. தனது செல்போனில் பெரிதுபடுத்தி பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் பெலகாவியில் நடந்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் போது பிரியங்கா காந்தியின் படத்தை தனது செல்போனில் பார்த்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில்  மதிய வேளையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரபு சவுகான் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது பிரியங்கா காந்தியின் புகைப்படமும் பிரபு சவுகானின் செல்போனில் இருந்தது. அந்த புகைப்படத்தை அவர் பெரிதுபடுத்தியும் பார்த்தார்.அந்த காட்சிகளை தனியார் தொலைகாட்சியினர் படம் பிடித்து வெளியிட்டனர். சட்டசபை கூட்டத்தின் போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரபு சவுகான், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மஞ்சுளா நாயுடு கூறுகையில், “பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரபு சவுகான், தனது செல்போனில் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பார்த்தது கண்டனத்துக்கு உரியதாகும். பா.ஜனதா எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் சட்டசபையில் மக்கள் பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண வேண்டும்.

ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையில் செல்போனில் படங்களை பார்த்து ரசிப்பது மிகுந்த வேதனையான விஷயமாகும். என்றார். சட்டசபையில் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை எம்.எல்.ஏ. பிரபு சவுகான் பார்த்ததற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

 
Top