0
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

ரகசியம் காக்கப்படுவதாலோ என்னவோ ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை பற்றிய ஆவல் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டிருக்கிறது.

கூடவே ‘ஆழ்வார்’ படம்போல் மொக்கையாக இருந்துவிடக்கூடாதே என்ற பயமும் இருக்கிறது.

ஒரு பக்கம் எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் பயம் என அஜித்தின் ரசிகர்களின் பி.பி. கன்னாபின்னாவென்று எகிறிக்கொண்டிருக்கிறது.

அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை பற்றிய ரகசியத்தை வெளியிடுகிறோம்.

ஒருவேளை இந்தக்கதைக்கும், ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதைக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் இருந்தால்….அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

இந்த நிபந்தனைக்கு ஓகே என்றால் மேலே படியுங்கள் மக்களே….

அஜித்தும் அருண்விஜய்யும் நண்பர்கள்.

அருண்விஜய் அந்த ஏரியாவிலேயே லோக்கல் தாதா.

அருண்விஜய்யின் ரௌடித்தனத்தைப் பார்த்து ‘எப்படி பாஸ் பயப்படாம சண்டை போடுறீங்க?’ என்று வியக்கும் அளவுக்கு அஜித் நல்ல டைப்.

அஜித்தின் வியப்புக்கு பதில் சொல்லும்போது அருண்விஜய் கேஷுவலாக ஒரு தடவை அஜித்திடம் சொல்கிறார்…
‘நானெல்லாம் ஒண்ணுமே இல்லை. எங்க பாஸ் ஒருத்தர் இருக்காரு. அவருதான் கெத்து. உன்ன அவருகிட்ட கூட்டிட்டு போறேன். அவரைப் பார்த்தா நீ மிரண்டு போயிருவே’

சொன்னபடியே அஜித்தை ஒருநாள் தன் பாஸிடம் அழைத்தும் போகிறார் அருண்விஜய்.

அருண்விஜய்யின் தலைவனைக் கண்டதும் யாருமே எதிர்பார்க்காவகையில் அவனை ஷூட் பண்ணுகிறார் அஜித்.

அதுமட்டுமல்ல, உடனடியாக அருண்விஜய்யையும் கைது செய்கிறார்.

ஏன்? என்னாச்சு?

இன்னுமா புரியலை?

அஜித் ஒரு போலீஸ் அதிகாரி.

அவர் போலீஸ் அதிகாரி என்பதே தெரியாமல் அதுவரை பழகிய அருண்விஜய் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

அதுமட்டுமல்ல, உக்கிரமானவராகவும் ஆகிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகிறார் அருண்விஜய்.

அஜித்தின் முன்னாள் காதலியும் தற்போதைய விதவையுமான த்ரிஷாவை கொல்கிறார்.

த்ரிஷாவை கொலை செய்தது மட்டுமல்ல, அஜித்திடம் சவாலும் விடுகிறார் அருண்விஜய்.

என்ன சவால்?

‘இன்னும் நான் கொல்ல வேண்டியது ரெண்டு பேர் பாக்கியிருக்காங்க. ஒன்ணு த்ரிஷாவின் குழந்தை. இன்னொன்று உன் தோழி அனுஷ்கா. முடிஞ்சா தடுத்துக்கோ’

என்று சவால்விட்ட அருண்விஜய்யிடம் நேருக்கு நேர் மோதி அவரையும் போட்டுத்தள்ளுகிறார் அஜித்.

வெயிட்..வெயிட்…படம் முடியவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு என்ற கார்டுக்கு பிறகு தொடரும் காட்சியில்…..

அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டு, த்ரிஷாவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கிறார் அஜித்.

Post a Comment

 
Top