மான் கராத்தே’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘காக்கி சட்டை’ (டாணா).
இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க படத்தை தயாரித்திருக்கிறார் தனுஷ். முதன் முறையாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தை வரும் கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள ‘காக்கி சட்டை’ படத்தின் விளம்பரங்களில் ‘பொங்கல் வெளியீடு’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பொங்கல் போட்டியில் ஷங்கரின் ’ஐ’, அஜித்தின் ‘என்னை அறிந்தால், விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய 3 படங்கள் இருக்கும் நிலையில் இப்போது நான்காவதாக ‘காக்கி சட்டை’ படமும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இதனால் பொங்கல் போட்டியில் இருக்கும் 3 படங்களில் ஏதோ ஒரு பெரிய படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. இதை அறிந்து தான் ‘காக்கி சட்டை’ படத்தை திடீரென பொங்கல் கோதாவில் இறக்கிவிட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்

Post a Comment