வை ராஜா வை எனும் ஒரே படத்தில் நான்கு சினி பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். 3 படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ''வை ராஜா வை''. கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ப்ரியா ஆனந்த்தும், டாப்சியும் நடித்துள்ளனர். கேம்ளிங்கை மையப்படுத்தி, ''வை ராஜா வை'' படம் உருவாகியுள்ளது. மேலும் வை ராஜா வை படத்தில் நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். அதாவது, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராகவும், கார்த்திக்கின் மகன் ஹீரோவாகவும், வைரமுத்துவின் மகன் மதன் கார்கி பாடலாசிரியாகவும், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஆக ஒரே படத்தில் இந்த நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர்.
இதனிடையே இப்படத்தின் இசை வௌியீட்டு விழா இன்று(டிச.,10ம் தேதி) சென்னையில் நடந்தது. தனுஷ் தலைமையில் இந்த ஆடியோ விழா நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஔிப்பரப்பு செய்யப்பட்டது. ரஜினி பேசுகையில், ஐஸ்வர்யா தனது முதல் படத்தை ஆர்ட் பிலிமாக இயக்கி இருந்தார். அதன்பிறகு என்னிடம் ஒரு ஆக்ஷ்ன் நிறைந்த கமர்ஷியல் கதை ஒன்று தயாராக உள்ளதாகவும், விரைவில் அதை இயக்க இருப்பதாகவும் கூறினார். அப்போது அவர் சொன்ன கதை, இப்போது ''வை ராஜா வை'' மூலமாக நிறைவேறியிருக்கிறது. இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நான் அவருடைய பருத்திவீரன், பில்லா போன்ற படங்களின் இசையை மிகவும் ரசித்துள்ளேன். அவரது இசைக்கு நான் பெரிய ரசிகன். வை ராஜா வை படத்தின் பாடல்களையும் கேட்டேன், சிறப்பாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பேசினார்.
வை ராஜா வை படத்தின் இசை வௌியீட்டு விழாவில், ஹீரோ கௌதம் கார்த்திக், ஹீரோயின்கள் ப்ரியா ஆனந்த், டாப்சி, இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், ஔிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சிறப்பு விருந்தினர்கள் தனுஷ், லதா ரஜினிகாந்த், இயக்குநர் பாலா, அனிரூத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment