0
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

தனக்கு முறையான ராயல்டி தருவதில்லை என்றும், தனது இசையை சட்டத்திற்கு புறம்பாக விற்பதாகவும் அந்த புகாரில் புலம்பி இருந்தார்.

“சட்டத்திற்கு புறம்பாக விற்பதாக” சொல்லும் இளையராஜா “ராயல்டி தருவதில்லை” என்று சொல்வதிலேயே முரண்பாடு தெரிகிறது.

சட்டத்திற்கு புறம்பாக விற்பவர் எதற்காக இளையராஜாவுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்?

ஆக, இளையராஜாவுக்கும் அகி மியூஸிக் நிறுவனத்துக்கும் இடையில் நடப்பது பணம் சம்மந்தமான பஞ்சாயத்து என்பது உறுதியாகிறது.

இதை மறைத்துவிட்டு அகி மியூசிக் நிறுவனத்தை ஏதோ திருட்டி விசிடி விற்பவரைப்போல் சித்தரிக்க முயன்று வருகிறார் இளையராஜா.

இளையராஜாவின் புகாரில் பொய்கள் கொட்டிக்கிடப்பதாலோ என்னவோ அவரது புகாரை காவல்துறை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் மலேஷியாவைச் சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன், சென்னைக்கு வந்து காவல்துறை ஆணையரிடம் இளையராஜா மீது புகார் கொடுத்திருப்பதாக தகவல்.

சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்திலும் இளையராஜா மீது புகார் கொடுத்திருக்கிறாராம் அகிலன்.
இளையராஜா மீது அகிலன் வைக்கும் புகார்களைக் கேட்டால் தலைசுற்றுகிறது.

இளையராஜா எந்தளவுக்கு சிறந்த இசையமைப்பாளரோ அதைவிட பணத்தாசை பிடித்த மனிதர் என்பது நாம் அறிந்ததுதான்.

அவரது பணத்தாசை காரணமாக இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார் இளையராஜா.

சரி…அகிலன் என்ன சொல்கிறார்?

2007 எங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு 2011 வரையிலும் எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுத்ததோடு 2013 இல் எங்கள் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே எங்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு எங்களை விட்டுக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி அவருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலும் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி 2014 எங்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்று பொய் தகவல் அளித்து எங்களுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றதொடு, 2010 இல் எங்களுடன் அவர் பாடல்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்திருப்பதாக பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிகளுக்கு நேரடி அறிக்கை அளித்துவிட்டு இன்று அதையும் மறுத்து வருகிறார்.

எங்கள் தரப்பு விவாதங்களை நீதிமன்றத்தில் வழங்கி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக பொய்ப்புகார்களை போலிசாரிடம் வழங்கி எங்கள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஐகமாக நடந்ததோடு, பிற இசையமைப்பாளர்களின் மற்றும் தயாரிப்பாளர்களின் பாடல்களைக் கூட நாங்கள் விற்க முடியாத வகையில், எங்கள் அலுவலகத்தையும் வியாபாரத்தையும் முடக்கி இருக்கிறார்.

எந்த ஆதாரங்களும் அற்ற நிலையில் தினம் தினம் பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டு எங்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு, பிற இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கும்படி செய்து வருகிறார். பல தயாரிப்பாளர்களிடம் நேரிடையாக நாங்கள் ஒப்பந்தம் இட்டிருக்கும் அவரது பிற பாடல்களுக்கும் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதோடு, அவருக்கு உரிமை இல்லாத அந்த சிலப்பாடல்களையும் அவர் நிறுவனத்தின் மூலம் வெளியீடு செய்து, தயாரிப்பாளர்களுக்கும் எங்களுக்கும் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்.

அம்புலி, மாலுமி, தாண்டவகோனே, ஆஆஆஆ, தீக்குளிக்கும் பச்சை மரம், செங்காத்து பூமியிலே போன்ற பல சிறு தயாரிப்பாளர்கள மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்களை வெளிட்டு ஆதரவு அளித்துவரும் எங்களை களங்கப்படுத்தி சட்டவிரோதமாக எங்கள் வியாபாரத்தை முடக்குவதன் மூலம் பிற தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளரகளுக்கும் பல வழிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாது, இளையராஜாவை நாங்கள் ஏமாற்றி வருகிறோம், திருடர்கள், நேர்மையற்றவர்கள் என்று அவரது அதிகாரப்பூர்வ முகநூல் ரசிகர் மன்றத்தின் வழியும் பத்திரிகை மூலமும் செய்திகள் பரப்பி அவரது ரசிகர்களிடத்தில் எங்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணி வருகிறார்கள். இதை நம்பி சில ரசிகர்கள் அந்த முகநூலில் நேரடியாகவும் எங்களுக்கு மறைமுகமாகவும் கொலை மிரட்டல்களும் விடுகிறார்கள்.”

அகிலன் தரப்பு நியாயத்தை காது கொடுத்து கேட்டு, காவல்துறை நியாயமான நடவடிக்கையில் இறங்கினால் இளையராஜா கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சட்டநிபுணர்கள்.

இளையராஜா என்கிற கலைஞனை அவரது பணத்தாசை காவு வாங்கிவிட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!

Post a Comment

 
Top