0
 ‘பாரதி கண்ணமா', ‘பொற்காலம்', 'பாண்டவர் பூமி,' ‘ஆட்டோக்கிராப்', ‘தவமாய் தவமிருந்து' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் சேரன், இப்போது இயக்கியுளள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், தியேட்டர் கிடைக்காமல், வெளியிட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், சேரன் புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீடுகளுக்கே கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

சமீபகாலமாக இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்த சேரன், வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிடவுள்ளார். உலகமெங்கும் 50 லட்சம் டிவிடிகள் விற்பனையாகும் என்றும், அதன்மூலம் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டுகளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பொங்கலுக்கு சேரனின் ஜேகே என்ற நண்பனின் வாழ்க்கை படத்துடன் விஷாலின் ஆம்பள, விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், சிவகர்த்திகேயனின் காக்கி சட்டை ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

Post a Comment

 
Top