0
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு லிங்கா படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருப்பதால், அதற்கு முந்தைய வாரமான டிசம்பர் 5ஆம்
தேதியும், அடுத்த வாரமான டிசம்பர் 19ஆம் தேதி வேறு எந்தப் படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்பதே தற்போதைய நிலவரம்.

காரணம்.. ரஜினியின் லிங்கா படத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் அதாவது சுமார் 750 தியேட்டர்கள் புக் பண்ணப்பட்டுள்ளதால், ஒருவேளை மற்ற படங்கள் வெளியானாலும் அப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் குறைந்தளவு தியேட்டர்களே கிடைக்கும். குறைந்தளவு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தால் வசூலை அள்ள முடியாது என்பதால் யாரும் படங்களை ரிலீஸ் செய்ய தயங்கும் நிலையில் தைரியமாக லிங்கா வெளியாகும் அடுத்த வாரமான டிசம்பர் 19ஆம் தேதி தங்களது பிசாசு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்!

டிசம்பர் 19 ஆம் தேதி பிசாசு படத்தை வெளியிடுவதில் பாலாவுக்கு மிஷ்கினுக்கும் விருப்பம் இல்லை என்றாலும் அப்படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடும் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் தான் துணிந்து இம்முயற்சியில் இறங்கி உள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க, இந்த வருட கிறிஸ்துமஸிற்கு படங்களை ரிலீஸ் செய்ய கோடம்பாக்கத்தில் பெரிய போட்டாபோட்டியே நடைபெற்று வருகிறது. சித்தார்த்தின் எனக்குள் ஒருவன், எஸ்.ஜே.சூர்யாவின் இசை, பிரபுசாலமனின் கயல், ஆர்யாவின் மீகாமன் ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளன.

சிம்புவின் வாலுவும் கிறிஸ்துமஸிற்கு தான் ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 படங்கள் களத்தில் இருக்க தற்போது, விக்ரம் பிரபுவின் வெள்ளக்காரதுரையும் கிறிஸ்துமஸ் அன்று களமிறங்க உள்ளது.

டிசம்பரில் கோடம்பாக்கத்தில் கொண்டாட்டம்தான்.

Post a Comment

 
Top