0
வங்கித் துறையில் பெயர் சொன்னாலே ஒவ்வொரு இந்தியரும் அறியும் மிக முக்கியமான வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திர
போராட்டத்திற்கு முன்னரே துவங்கப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்ற பெயர் பெற்றது. வங்கித் துறை தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் பெற்று அன்றிலிருந்து இன்றுவரை இத்துறையில் தனி முத்திரை பதித்து இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி நம்மால் எஸ்.பி.ஐ., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது.

மிக அதிக எண்ணிக்கையிலான கிளைகள், அதிக எண்ணிக்கையிலான ஏ.டி.எம்.,கள், நவீனமய சேவைகள் என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த வங்கியில் நாடு தழுவிய அளவில் காலியாக உள்ள 5092 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இவற்றில் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட பிரிவில் கிட்டத்தட்ட 400 காலியிடங்கள் உள்ளன.

வயது: பாரத ஸ்டேட் வங்கியின் உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2014 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 முதல் 01.05.1994க்குள் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைப் பெண்களுக்கு சில சலுகைகள் உள்ளன. முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது கல்லூரிப் படிப்பின் இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் செலுத்தலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேக இ-மெயில் முகவரி தேவைப்படும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட உங்களின் கையெழுத்து, பாஸ்போர்ட் புகைப்படம் போன்றவையும் தேவைப்படும் என்பதால் முதலில் இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முழுமையாக தகவல்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.06.2014

ஆன்-லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 14.06.2014

ஆப்-லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 17.06.2014

இணையதள முகவரி: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1400852958172_SBI_RECRUITMENT_OF_ASSISTANTS_CLERICAL_CADRE.pdf

Post a Comment

 
Top