முழுக்க முழுக்க சமஸ்கிருதத் தில் முதல் முறையாக ஒரு அனிமேஷன் படம் உருவாகிறது. புண்யகோடி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார்.
வறுமை தலைவிரித்தாடும் கருநாடு என்ற கிராமத்தில் உண்மையை மட்டுமே பேசும் ஒரு பசு, அதைப் பழிவாங்கக் காத்திருக்கும் புலியின் கதைதான் இந்த புண்யகோடி.
புண்யகோடி... இளையராஜா இசையில் உருவாகும் சமஸ்கிருத அனிமேஷன் படம்
கிரவுட் பண்டிங் எனும் பொதுவெளியில் பணம் திரட்டி படம் எடுக்கும் முயற்சி இது. யார் வேண்டுமானாலும் இந்தப் படத்துக்கு நிதியுதவி செய்து தயாரிப்பாளர்களில் ஒருவராகலாம்.
இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதோடு, வாழ்த்தும் தெரிவித்துள்ளார் இளையராஜா.
படத்தை ஏன் சமஸ்கிருதத்தில் எடுக்கிறார் ரவிஷங்கர்?
இதற்கு அவர் தரும் விளக்கம்:
"சமஸ்கிருதம் விஞ்ஞான மொழி. வாழ்க்கை முறையைச் சொல்லித் தரும் மொழி. ஆங்கிலம் உள்ளிட்ட பல மேலைநாட்டு மொழிகளுக்கு மூலமே சமஸ்கிருதம்தான்.
சமஸ் கிருதம் படித்து. சமஸ்கிருதத்தில் பேசுவதால் பல உடல் உபாதைகள் நீங்குகின்றன.
இந்திய கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் செய்யும் மரியாதையாகவே இந்தப் படத்தை எடுக்கிறேன்," என்கிறார்.
சமஸ்கிருத வாரம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கும் திட்டம் என மோடி அரசு சமஸ்கிருதத்துக்கு பெரும் முக்கியத்துவம் தந்து வரும் இந்தத் தருணத்தில், சமஸ்கிருதத்தில் முழு நீள அனிமேஷன் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது

Post a Comment