0
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் என பல வெற்றிப்படங்களை இயக்கி வந்த சேரன் என்றைக்கு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாரோ அன்றுக்கு பெரும் சறுக்கலை சந்திக்க ஆரம்பித்தார்.

மேலும் சேரனின் பொக்கிஷம் உட்பட சில படங்கள் பெரும் தோல்வியடைந்ததால் அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையைத் தொடங்கியது.

இந்த நேரத்தில் அவர் இயக்கியை ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை ஆரம்பித்தார். ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் அதை யாரும் வாங்கி ரிலீஸ் செய்ய முன்வரவில்லை.

ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்கிற கேள்விக்கு பதிலே இல்லாமல் முடங்கிக் கிடந்த அந்தப்படத்துக்கு இப்போது விமோசனம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக C2H (Cinema to Home) என்ற முறையில் டிவிடி முறையில் நேரடியாக வீடுகளில் படத்தை வெளியிட முடிவு செய்த சேரன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடித்து விட்டார். இந்த திட்டத்தின் கீழ் முதல் படமாக தனது ‘ஜேகே’ படத்தை வரும் ஜனவரி 15 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் சேரன்.

சுமார் 50 லட்சம் டிவிடிகளை இந்தப்படத்துக்காக தயாரித்து வைத்துள்ள அவர் அந்த எண்ணிக்கையிலான டிவிடிகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறாராம்.

ஆக தியேட்டருக்கு ரிலீசாகாமல் ஒவ்வொரு வீட்டையும் தனது படம் ரிலீசாகும் தியேட்டராக நினைத்துள்ள சேரன் அந்த வகையில் 50 லட்சம் தியேட்டர்களில் என் படம் ரிலீசாகப்போகிறது என்கிறார்.

Post a Comment

 
Top