0
மீடியாக்காரர்கள் என் மொத்த வாழ்க்கையையும் சிதைத்து விட்டார்கள். இது நியாயம்தானா? என்று கேட்டு ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து. விடுதலையாகி வந்துள்ள நடிகை ஸ்வேதா பாசு.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் சொல்லாத விஷயங்களை மீடியாக்களே இட்டுக்கட்டி எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம்

அந்த கடிதம்:

எனக்கு சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகாரர்கள் மீது மரியாதை உண்டு. எங்கோ எல்லைப் பகுதியில் இருந்தபடி போர்ச்செய்திகளைத் தரும், மோசமான கால நிலையில் இருந்தபடி இயற்கைச் சீற்றங்களைப் பற்றி செய்திகள் தரும், பயங்கரவாதத்தின் நுனியில் நின்றபடி, அதன் கோரங்களைப் படம் பிடிக்கும் அந்த செய்தியாளர்களை என் வாழ்க்கையின் ஹீரோக்களாக நினைத்தேன். அதனால்தான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பட்டமும் பெற்றேன்.

ஆனால் அதே பத்திரிகையாளர்கள்தான் என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டனர்.

என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்தன என்பது புரிகிறது. ஆனால் நான் சொல்லாத, வெளியிடாத அறிக்கையையெல்லாம் கற்பனையாக எழுதி என் பெயரில் வெளியிட்டு என் வாழ்க்கையை மேலும் சிதைத்தன மீடியாக்கள்.

இந்த அறிக்கையைப் பாருங்கள்:

"என் வாழ்க்கையில் மோசமானவற்றை தேர்வு செய்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை. என் குடும்பத்தை காப்பாற்றவும், வேறு சில நல்ல விஷயங்களுக்காகவும் பணம் தேவைப்பட்டது. எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், விபச்சாரத்தில் இறங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என சிலர் வழிகாட்டினர். எனக்கு வேறு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் விபச்சாரத்தில் இங்கினேன். நான் ஒருத்தி மட்டுமல்ல, என்னைப் போல பல நடிகைகள் விபச்சாரச்சில் ஈடுபட்டுள்ளனர்..."

- ஏதோ 80களில் வெளிவந்த சினிமா வசனம் மாதிரி உள்ள இந்த அறிக்கையை சத்தியமாக நான் வெளியிடவில்லை. நீங்கள் எப்பேர்ப்பட்ட பத்திரிகைகாரராக இருநாதாலும், தயவு செய்து இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நல்ல வேளை என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இதனை நம்பவில்லை. நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன் என அவர்களுக்குத் தெரியும்.

இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள அத்தனைப் பேருக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன், இப்படி ஒரு அறிக்கையை நான் வெளியிடவே இல்லை. யாருக்கும் அப்படி பேட்டி கொடுக்கவுமில்லை.

என்னதான் என்மீது இரக்கப்பட்டு, ஆதரவு தெரிவித்தாலும், இந்த 23 வயதில் சொந்தக் காலில் இந்தப் பெண் நிற்கிறாளா என்ற பலரது சந்தேகம்தான் நமது சமுதாயத்தில் உள்ள பிரச்சினையே... என்னை மதிக்க வேண்டும், விரும்ப வேண்டும் என யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. நடந்த எதுவும் என் கட்டுப்பாட்டை மீறியது.

என்னைக் கைது செய்ததும் நேராக பெண்கள் இல்லத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். அங்கு 59.5 நாட்கள் காவலில் இருந்தேன். இந்த நாட்களில் எனக்கு நாளிதழ் வாசிக்கவோ, டெலிவிஷன் பார்க்கவோ, இணையதளம் பார்க்கவோ அனுமதியில்லை. என் அம்மாவுக்கு மட்டும் இரு முறை செல்போனில் பேசினேன். மீதி நேரத்தில் அந்த போனை வாங்கி வைத்துக் கொண்டனர். இதில் எங்கே எப்போது யாருக்கு நான் அப்படி ஒரு அறிக்கை கொடுத்திருக்க முடியும்!

அக்டோபர் 30-ம் தேதி மும்பை திரும்பிய பிறகு அத்தன் நாளிதழ்களின் செய்திகள், இணையதளச் செய்திகளைப் படித்தேன். அவற்றைப் படித்த பிறகு வருத்தப்பட்டதை விட, ரொம்ப வேடிக்கையாக உணர்ந்தேன்.

இப்படி ஒரு அறிக்கையை நானும் தரவில்லை. ஹைதராபாத் போலீசும் வெளியிடவில்லை. அவர்கள் இதை என்னிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அப்படி ஏதாவது அறிக்கை வெளியாகியிருந்தால் அது சட்டவிரோதமானது.

சரி, என்னுடன் யாரோ ஒரு தொழிலதிபர் இருந்ததாக கதை விட்டார்கள் அல்லவா... என்னைக் கைது செய்த போது உடனிருந்த அந்த தொழிலதிபர் யார் என்பதையும் வெளியிட்டிருக்கலாமே.. யார் அவர் என்ற விவரம் இருக்கிறதா... இருந்தால் நிரூபிக்கலாமே!

அந்த இல்லத்தில் நான் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இருந்தேன். குழந்தைகளுக்கு இந்தி கற்றுக் கொடுத்தேன். இந்துஸ்தானி இசை கற்றுத் தந்தேன். 2 மாதங்களில் 12 புத்தகங்கள் படித்தேன்.

உண்மையில் நான் ஹைதராபாத் வந்தது சந்தோஷம் விருது விழாவுக்காக. அவர்கள்தான் எனக்கு டிக்கெட் போட்டு வரவழைத்தனர். எந்த புரோக்கரும் அல்ல.. நான் வணிக ரிதீயான விபச்சாரத்தை ஆதரிப்பவளும் அல்ல. அந்த ஹோட்டலில் என்னுடன் இருந்தவர்கள், விழாவுக்கு வந்த விருந்தினர்கள் மற்றும் விழாக்குழுவினர்தான்.

பணமில்லாமல் நான் கஷ்டப்பட்டதாகக் கூறுவது பெரிய அபத்தும். அதேபோல வாய்ப்புகளின்றியும் நான் இல்லை.

என் பெற்றோர் எனது கல்வியில்தான் அக்கறையாக இருந்தனர். 2005-ம் ஆண்டு இக்பால் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றேன். அதன் பிறகு என்னை படிக்க வைப்பதில் அக்கறை காட்டினர் பெற்றோர்.

எனது 21வது வயதிலேயே ரூட்ஸ் ஆன் இந்தியன் க்ளாஸிக்கல் மியூசிக் என்ற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மான், ஹரிபிரசாத் சவுராசியா போன்ற இசை மேதைகளை பேட்டி கண்டு ஆவணப் படம் செய்தேன்.

இந்த ஆண்டு நசுருத்தீன் ஷாவுடன் இணைந்து நான் நடித்த குறும்படம் இன்டர்நேஷனர் நைட் கபே, பல சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில்தான், நான் இப்படி தவறான தண்டனைக்குள்ளானேன். இதில் வாய்ப்புகளில்லாததால் விபச்சாரத்தில் விழுந்ததாகக் கூறப்படுவது எத்தனை பொய்யானது?

டிசம்பர் 5-ம் தேதி நாம்பள்ளி நீதிமன்றம் என் மீது எந்தத் தவறும் இல்லை, போலீஸார் போட்டது பொய் வழக்கு என்று திட்டவட்டமாக அறிவித்து விடுதலையும் செய்துவிட்டனர். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.

அதேநேரம், ஒரு தப்பான, பொய்யான அறிக்கையை தீவிரமாகப் பரப்பிய மீடியாக்களின் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்."

-இவ்வாறு ஸ்வேதா பாசு எழுதியுள்ளார்.

Post a Comment

 
Top