0
அஜித் படம் வருகிறது என்றாலே சமூக வலைத்தளங்களில் திருவிழா தொடங்கிவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் டீசர் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த டீசர் தற்போது வரை 35 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. அதேபோல் 77,000 லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய படங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

தற்போது இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இப்படத்திற்கு சல்மான் கான் நடித்த கிக் படத்தின் டீசரே தடையாக இருக்கிறது. இப்படம் 1 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. கூடிய விரைவில் இந்த சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post a Comment

 
Top