0
அமெரிக்காவில் 328 அரங்குகளில் தமிழிலும் தெலுங்கிலும் ரஜினியின் லிங்கா வெளியாவதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

அடுத்ததாக, லிங்கா வெளியீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாகக் கொண்டாட அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். ரஜினி படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் நடக்கும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இணையாக அமெரிக்காவிலும் இந்த முறை நடத்தப் போகிறார்களாம். கூடவே ரஜினி பிறந்த நாளையும் அமர்க்களமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ரஜினிக்கு பிரமாண்ட பேனர்கள்... 100 அரங்குகளில் லிங்கா பிரிமியர் ஷோ!

அமெரிக்காவில் லிங்கா வெளியாகும் அரங்குகளில் ரஜினிக்கு 30 அடி உயர கட் அவுட் வைத்துள்ளனர். இந்த 328-ல்100 அரங்குகளில் 11-ம் தேதியே பிரிமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகாகோவில்..

சிகாகோ நகரில் ரோஸ்மான்ட் ஐமேக்ஸ் அரங்கில் மாலை 7 மணிக்கு பிரிமியர் காட்சி நடைபெறுகிறது. இந்தக் காட்சிக்கு வருபவர்களுக்காக தமிழகத்திலிருந்து லிங்கா டி ஷர்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. லிங்கா பேனர்களும் தமிழகத்தில் தயாராகி வந்துள்ளன. இந்தக் காட்சிக்கு கட்டணமாக 25 டாலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1500 கட்டணம். ரோஸ்மாண்ட் ஐமேக்ஸில் 500 பேர் வரை படம் பார்க்கலாம்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஜெய் பாலா. ரஜினியை திரையில் பார்த்ததும் விசிலடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் இலவச விசில் தரவும் ஜெய் பாலா ஏற்பாடு செய்துள்ளார்.

ரசிகர்களின் இந்த ஏற்பாடுகளைப் பார்த்த சிகாகோ டெலிவிஷன் மற்றும் மீடியாக்கள் இதனை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளனவாம். மேலும் விபரங்களுக்கு: facebook.com/lingaachicago

Post a Comment

 
Top