மாதா பிலிம்ஸ் சார்பில் ஆர்.எல்.ஏசுதாஸ் வழங்க வி.ஐ.பி சினிமாஸ் சார்பாக கார்த்திக் ரெட்டி தயாரித்துள்ள படம் ‘ராகு’. இப்படத்தில் கெல்வின், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, ஹீரோயின்களாக ரேஷ்மா, ரியா, அக்ஷயா, சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஐ.ஜெ.பி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீ நார்த் இசையமைக்கிறார். ஞானகரவேல், மதன் ஆகியோர் பாடல்கள் எழுத, கணேஷ் ராவ் போன்ஸ்லே படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டைல் பாலா நடனம் அமைக்கிறார்.
கார்த்திக் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சதீஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் சதீஷ் சுப்பிரமணியம் கூறுகையில், “கல்லூரியில் படிக்கும் மூன்று இளைஞர்கள் உயிர்த்தோழர்கள். அவர்கள் அவர்களைப் போல் உயிர்க்கு உயிராக நேசிக்கும் மூன்று தோழிகளைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் இந்த காதல் வலையில் மூன்று தோழிகளும் சிக்குகின்றனர். இந்த காதல் ஜோடிகளின் வீட்டிலும் எதிர்ப்பு வரும் என்பதால், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்வதற்காக அருகில் உள்ள மலைக்கோட்டை கோயிலுக்கு செல்கின்றனர். திரும்பி கீழே இறங்கி வருவதற்குள் இருட்டி விடுகிறது. அந்த இரவில் அவர்கள் சந்திக்கும் அபாயகரமான நிகழ்வுகள் தான் கதைக்களம்.
கன்னியாக்குமரி அருகில் மருங்குரில் 1000 அடி மலைப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகிகளுள் ரேஷ்மா பேய் வேஷம் போட்டி ரியாவை துரவத்துவது போன்ற ஒரு காட்சி நள்ளிரவு 1 மணி அளவில் படமாக்கி கொண்டிருந்தனர். திடீரென ரியா மயங்கி விழ உடனே பூசாரியையும் நாட்டு வைட்த்தியரையும் அழைத்து வந்து வேப்பிலை அடித்து மருத்துவ முதலுதவி செய்து மயக்கம் தெரிய வைத்தனர். நான் நிஜப் பேய் என்று பயந்துவிட்டேன் பயத்துடன் கூறினார். பின் தங்கியிருக்கும் கொட்டகையில் ஓய்வெடுக்க வைத்தனர். மலைப்பாம்பு ஒன்று கூரைக்குள் ரியாவுக்கு எதிரே நெருங்கிக் கொண்டிருந்தது. ரியா பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த இயக்குநர் பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டார்.
நாகர்கோவில், மயிலாடி, கன்னியாக்குமரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Post a Comment