0
இராணுவ சர்வாதிகார ஆட்சியில் தாம் நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் ஜனாதிபதி உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1964ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பிரேசிலில் இராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது.
அப்போது  அந்த ஆட்சியை எதிர்த்த மக்களை ராணுவம் கைது செய்து கொடுமைப்படுத்திக் கொலை செய்தது.

இதே போல் மக்களுள் ஒருவராக எதிர்ப்பை தெரிவித்ததில் பிரேசிலின் தற்போதைய ஜனாதிபதி தில்மாவும் ஒருவர் ஆவார்.
தான் பாதிக்கப்பட்டது குறித்து தில்மா கூறியதாவது, கொடுங்கோல் ஆட்சியில் பல கொடுமைகளுக்கு ஆளானேன். எனக்கு 22 வயதாக இருக்கும்போது அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த 1970ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன்.

சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள், மின் அதிர்ச்சி கொடுத்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினர்.
மேலும் என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்று, என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள்.

இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது.
இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து, அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது என அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.

இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top