0
தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தை தமிழகர்களுக்கு எடுத்துரைத்தவர் தான் சேரன். தன் ஒவ்வொரு படைப்பையும் அவர் இயக்கவில்லை, செதுக்கினார் என்று சொன்னால் கூட மிகையல்ல. கிராமங்களாக இருக்கட்டும், நகரங்களாக இருக்கட்டும் அனைத்தையும் உண்மையாகவும், நேர்மையாகவும் நம் கண்முன் கொண்டு வந்து பிரதிபலித்தவர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக வருவார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் தன் முதல் படமே அறியாமையை சாதி வெறியையும் கூண்டோடு அழிக்கும் பாரதி கண்ணம்மா என்ற படைப்பை கொடுத்தார்.

தமிழ் மக்கள் அனைவரும் வெளி நாடு மோகம் பிடித்து அலைய, நம் நாட்டில் என்ன இல்லை, ஏன் வெளி நாடு போக வேண்டும் என்று அனைவரின் முகத்தில் அறைந்தது போல் கொடுத்தார் வெற்றி கொடி கட்டு.

தமிழர் வாழ்வை அப்படியே செல்லுலாய்டில் பிரதிபலித்த படம் தான் பாண்டவர் பூமி, இதை தொடர்ந்து ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தில் இடம்பெறும் பெண்களை மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பெண்களுக்கு கௌரவ படுத்தும் விதமாக இயக்கிய படம் தான் ஆட்டோகிராப்.

அதேபோல் ஒவ்வொரு மகன்களும் இப்படி ஒரு அப்பா நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கி ஏங்கி பார்த்த படம் தான் தவமாய் தவமிருந்து. இதை தொடர்ந்து மாயகண்ணாடி, பொக்கிஷ்ம் போன்ற பல தரமான படைப்புகளை இயக்கியுள்ளார்.

இதுவரை இவர் இயக்கிய 4 திரைப்படங்கள் தமிழகத்தின் சிறந்த படமாக தேசிய விருது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராக ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயகண்ணாடி, முரன், ராமன் தேடிய சீதை, சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் கதையின் நாயகனாக கலக்கியிருப்பார்.

இப்படி திரைத்துறையில் பல சாதனை படைத்த இயக்குனர் சேரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post a Comment

 
Top