0
‘விஸ்வரூபம்’ பட ரிலீஸ் விவகாரத்தில், ‘போதும் உங்க உபதேசம்’னு தூசிதட்டிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த கமல், பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டார். ஆனாலும் தனது படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என வீம்பு செய்த சில தியேட்டர்காரர்கள் மீது காம்படேட்டிடேட் கமிஷன் ஆப் இந்தியா அமைப்பில் புகார் செய்தார். கெடச்சது, கெளுத்தி மீன் என்று அமைப்பும் தீவிர ஆக்ஷனில் இறங்கிவிட்டது.

இதனால் இண்டஸ்ரியில் சிலருக்கு சிக்கல் வரும் சூழல் ஏற்பட்டிருப்பதால் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கமலை அணுகி புகாரை வாபஸ் வாங்க கேட்கிறார்களாம். பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர கமல் நினைத்தாலும் புகாரை வாபஸ் பெற அமைப்பு அனுமதிக்காமல் இழுத்துபிடிக்கிறார்களாம்.

இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் தியேட்டர்காரர்கள் சிலர் கோபத்தில் கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிடாமல் செய்வதற்கான காரியங்களில் கவனம் செலுத்துவதாக கோடம்பாக்கம் வட்டாரம் கூவத் தொடங்கி இருக்கிறது. உத்தம வில்லன் படத்தை தயாரித்தலிங்குசாமி என்ன செய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறாராம். கமலோ தூற்றுபவர் தூற்றட்டும் நம் வேலையை நாம் சரியாக பார்ப்போம் என்றபடி படத்தின் கிராபிக்ஸ், சவுண்ட் எஃபக்ட்ஸ் பணிகளை கவனித்துக் கொண்டு பிஸியாக இருக்கி

Post a Comment

 
Top