0
தமிழ் சினிமா தற்போது பேய்கள் கண்ட்ரோலில் இருக்கிறது போல. அந்த வகையில் யாமிருக்க பயமே படத்தை தொடர்ந்து ஹாரர்+காமெடி கதைக்களத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 1 பந்து 4 ரன் 1விக்கெட்.

இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது முதலில் இது பேய் படமா? அல்லது கிரிக்கெட் படமா? என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், இதற்கான விடையை படத்தில் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

படத்தின் கதை

கதாநாயகன் தன் காதலித்த பெண்ணை(ஹீரோயின்) படத்தின் முதல் காட்சிலேயே கூட்டு கொண்டு ஓடுகிறார். அவரை துரத்தி கதாநாயகியின் முறை மாமன் செண்ட்ராயன் வர, அவர்களை பின் தொடர்ந்து போலிஸும் வருகிறது.

பின் ‘லொல்லு சபா’ புகழ் ஜீவா தான் சென்னையில் தங்கி வரும் கெஸ்ட் ஹவுஸை காதலர்களுக்காக தங்க அனுமதிக்கிறார். அங்கு முதல் நாள் தோட்டகாரனுடன் அனைவரும் கிரிக்கெட் விளையாடும் போது திடீரென்று பந்து அவர்களையே திருப்பி தாக்குகிறது.

பின் வீட்டில் இருக்கும் ஒரு பேய் கதாநாயகியின் மேலே இறங்க, அதே சமயத்தில் அந்த வீட்டிற்கு செண்ட்ராயன் குரூப், போலிஸும் வர பின் என்ன ஆகிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வித்தியாசமான கிளைமேக்ஸுடன் படம் முடிகிறது.

நடிகர், நடிகை, டெக்னிஷியன் பங்களிப்பு

நடிகர், நடிகைகள் இருவருமே புதுமுகம், இருந்தாலும் தங்களால் முடிந்த அளவு நன்றாக நடிக்க முயற்சி செய்துள்ளனர். படத்தின் மொத்த பலமும் செண்ட்ராயன் தோளில் தான் உள்ளது.

செண்ட்ராயன் தன் ஆயிரம் எக்ஸ்பிரஸனில் பின்னி எடுக்கிறார். அதிலும் குறிப்பாக பேயிடம் அடி வாங்கும் சீனில் தியேட்டரில் சிரிப்பு சத்தம் காதை பதம் பார்க்கிறது. ஜீவா வழக்கம் போல் தன் தன் கவுண்டர் வசனங்களால் கலக்குகிறார்.

இறந்தவர்களை கடவுள் என்று சொல்வது நாம் தான், அவர்களை பேய் என்று சொல்வதும் நாம் தான் போன்ற வசனங்கள் உதாரணம். இசை பேய் படத்திற்கு என்ன திகில் தேவையோ அதை உணர்ந்து இசையமைத்துள்ளார்.

க்ளாப்ஸ்

சான்ஸே இல்லை செண்ட்ராயன் நடிப்பு தான், ஒவ்வொரு காட்சியிலும் க்ளாப்ஸ் வாங்கி கொண்டே இருக்கிறார். இசை மிகவு நன்றாக உள்ளது. ஒளிப்பதிவும் பேய் வரும் காட்சிகளில் நம்மை காட்சியோடி ஒன்றினைக்க பயன்படுகிறது. சில சீன்கள் வந்தாலும் ஸ்ரீமன் பட்டையை கிளப்புகிறார்.

பல்ப்ஸ்

என்ன தான் காமெடி படம் என்றாலும் பேயின் ப்ளாஸ் பேக் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுகிறது. முதல் பாதியிலேயே இன்னும் திகிலை காட்டியிருக்கலாம். மற்றப்படி பெரிதாக ஒன்றும் இல்லை.

படத்தை பற்றி கருத்து

எல்லா பிரச்சனைகளையும் மறந்து வாய் விட்டு சிரித்து வரலாம், இந்த பேயை பார்த்து.

மொத்தத்தில் 1 பந்து 4 ரன் தேவைப்படும் போது செண்ட்ராயன் ஒருவரே 6 அடித்து விட்டார்.

Post a Comment

 
Top