டைரக்டர் ஷங்கரிடத்தில் உதவியாளராக பணியாற்றி விட்டு வெளியே வந்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார் அட்லி. ஆர்யா-நயன்தாரா நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, இப்போது ஷங்கரின் இன்னொரு உதவியாளரான கார்த்திக்கும் கப்பல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், விடிவி கணேசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ப்ரண்ட்ஷிப்பை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்த படத்தில் காதலையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் டைரக்டர் கார்த்திக். ஆனால் அதை காமெடி கலந்து இரண்டரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஸ்கிரிப்ட் பண்ணியிருககிறாராம். அதனால் படத்தை முடித்து விட்டு டைரக்டர் ஷங்கருக்கு அவர் ஷோ போட்டு காண்பித்திருக்கிறார்.
ஏற்கனவே காமெடி படங்களை அதிகம் ரசிப்பவரான டைரக்டர் ஷங்கர், கப்பல் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தாராம். அதோடு, படம் பார்த்து விட்டு வந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கார்த்திற்கு போன் செய்து. இந்த படத்தை நானே எனது எஸ் பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறேன் என்று கூறினாராம். இதனால் தனது படம் பாஸ் ஆகி விட்டது என்று உற்சாகத்தில் குதித்திருக்கிறார் கார்த்திக்.
அதோடு, இந்த படத்தை ஒரு சிறிய பட்ஜெட்டில்தான் ஆரம்பித்தேன். அந்தவகையில், நான் படத்தை எடுத்து முடிக்கிற வரை இது ஒரு சிறிய கப்பலாகத்தான் இருந்தது. ஆனால், ஷ்ங்கர் சார் படத்தை வாங்கிய பிறகு இப்போது பிரமாண்டமான கப்பலாகி விட்டது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் கார்த்திக், டிசமபர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று கப்பல் படம் திரைக்கு வர இருப்பதாக கூறுகிறார்.

Post a Comment