ரஜினியின் லிங்கா தமிழகத்தில் வெளியான திரையரங்குகளை விட தெலுங்கில் வெளியான திரையரங்குகள்தான் அதிகம். அங்கு பெரிய நடிகர்களின் தெலுங்கு படங்களுக்கே அவ்வளவு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் டப்பிங் படமான லிங்கா அதிகப்படியான திரையரங்குகளில் வெளியானது தெலுங்கு ஊடகங்களை டென்ஷனாக்கியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து லிங்கா படத்திற்கு விமர்சனம் எழுதிய தெலுங்கு ஊடகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் இதெல்லாம் ஒரு படமாய்யா…? என்பது போல் விமர்சனம் எழுதியிருக்கிறார்களாம். அனுஷ்கா இனிமே தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருப்பதே மேல் என்றெல்லாம் கூட தெலுங்கு ஊடகங்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்கள் தெலுங்கு படங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் சிலர் வேண்டுமென்றே ஊடகங்களை தூண்டிவிட்டு இது போன்று எழுதச் செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லிங்கா படத்திற்கு கிடைத்தது போன்ற அர்ச்சனை அடுத்து வெளிவரவிருக்கும் ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு தெலுங்கு ஊடகங்களிடம் இருந்து கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Post a Comment