காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான பலன் அளிப்பதில்லை. கோடைக்காலங்களில், அதுவும் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலை குளுமையாக வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அந்த நாட்களில், இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.
அனைத்து வகையான பருவநிலைகளிலுமே உடல் சூடு அதிகரித்து விடுவது பலருக்கும் பிரச்சனையான விஷயம் தான். அதன் காரணமாக ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் போன்றவை வரிசையாக அணிவகுத்து உடலின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொள்ளும் மனிதர்கள், உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இங்கே அது போன்று சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்
இஞ்சி
காரமான மற்றும் சூட்டை அதிகரிக்கும் காய்கறியாக இஞ்சி உள்ளது. இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. அதன் காரத்தன்மைதான் சூட்டை அதிகரிக்கும் குணத்தைக் கொடுக்கிறது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெருமளவு இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அதிகரித்து கெட்டுவிடும
மிளகாய்
மிளகு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் குணங்கள் நிறைய உள்ளன. உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டக் கூடிய குணமுடைய மிளகாயில், உடல் சூட்டை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே மிளகாய் சாப்பிடும் போது சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், நமது வாயில் உள்ள தோல் பகுதியை எரிக்கும் தன்மையும் மிளகு, மிளகாயின் காரத்திற்கு உண்டு - உஷார்
கேரட்
'பக்ஸ் & ஃபன்னி' முயல் குட்டியின் பேவரைட் சாப்பாடான கேரட்டில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அளவற்ற வகையில் உள்ளது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதன் உறுதியான வண்ணம் உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் மூலம் உடல் சூடும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, உஷ்ணத்தை அதிகரிக்கும் கேரட்டை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நலம்.
வெங்காயம்
எந்தவொரு உணவிலும் காரத்தை கூட்ட உதவும் காய்கறியாக வெங்காயம் உள்ளதால் தான், பல்வேறு சுவை மிக்க உணவுகளின் தயாரிப்பிலும் வெங்காயத்திற்கு பங்கு உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை அதிகளவு உட்கொண்டால், அதன் மூலம் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை நாம் அறியும் போது, வெங்காயம் உரிக்காமலே நமக்கு கண்ணீர் வந்து விடும். உடல் சூட்டை அதிகரிக்கும் குணமுடைய வெங்காயத்தை எடுத்து, உங்கள் கையின் அக்குளில் வைத்தால் உடல் சூடு தானாக மேலேறத் துவங்கி, உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி விடும். எனவே, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் வெங்காயத்திற்கு சொல்லுங்கள் 'NO'.
பச்சை இலைக் காய்கறிகள்
கீரைகள், பசலை கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று படித்திருப்போம். அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் இருப்பதால், அவை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், அதே பச்சை இலைக் காய்கறிகளில் புரதங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, அவற்றை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும். எனவே, உடலுக்குள் சூடு ஏற்படும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகளை தவிர்ப்பது நலம்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!
மேலே படித்த காய்கறிகள் எல்லாம் உடல் சூட்டை கூட்டக் கூடியவை தான். ஆனால், சத்தான இந்த காய்கறிகளை அளவாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. எனவே, காய்கறிகளை முழுமையாக தவிர்த்து விடாமல், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மனதில் கொண்டு, நமக்குத் தேவையான அளவில் மட்டும் சாப்பிடுவது நல்லது.
Post a Comment