0
இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா தயாரிப்பாளராகி, தயாரித்த படம் – ‘சதுரங்கவேட்டை’.

கடந்த சில மாதங்களுக்க முன் வெளியான சதுரங்க வேட்டை படத்தில், எச்.வினோத் என்ற புதிய இயக்குநரின் இயக்கத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் ’நட்டி’ என்கிற நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த வருடம் வெளியான படங்களிலேயே வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது – சதுரங்க வேட்டை.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிட்டதால் இப்படம் கூடுதல் கவனத்தையும் பெற்றது. அது வெற்றிக்கும் உதவியது.

சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக ‘பாம்பு சட்டை’ என்ற படத்தைத் தயாரிக்கிறார் மனோபாலா.

முதல் படத்தில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உடன் கூட்டணி அமைத்த மனோபாலா, ‘பாம்பு சட்டை’ படத்தை ராதிகாவின் ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

பாம்பு சட்டை படத்தில் கதா நாயகனாக பாபி சிம்ஹா நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குனர் ஷங்கரின்உதவியாளரான ஆடம் தாசன் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அசீஸ் அசோக் இப்பத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Post a Comment

 
Top