ஆதரவற்ற நாயகன் ராம் (ராம்) ஒரு பாதிரியார் உதவியுடன் வளர்கிறார். இவருக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. அப்படி இயற்கையை படம்பிடிக்க சென்ற ஒரு இடத்தில் நாயகி மோகினி (ஆதிரா)யை சந்திக்கிறார். பார்த்ததும் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, பின்னர் திருமணமும் செய்துக் கொள்கிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் மோகினி காணாமல் போகிறார். இவளை தேடி ராம் அலைகிறார். எங்கும் கிடைக்காமல் இருக்க, துப்பறியும் நிபுணரான ‘எக்ஸ்’ என்னும் ஒருவர் உதவியுடன் தேட ஆரம்பிக்கிறார். ஒருநாள் ஒரு மலை உச்சியின் உள்ள மனித மண்டை போல் உள்ள குகையில் மோகினி இருப்பதாக ‘எக்ஸ்’ சொல்லுகிறார். அதனால் ராம் அங்கு தேடி செல்கிறார். அந்த குகையில் ராம் சென்று பார்க்கும்போது மோகினி ஒரு மர்ம கும்பலிடம் சிக்கி இருப்பது போல் பிம்பம் தோன்றுகிறது.
மோகினியை காப்பாற்ற துடிக்கும் ராமை ஒரு மர்ம உருவம் அவரை குகையில் இருந்து வெளியேற்றுகிறது. பிறகு எக்ஸிடம் இருந்து போன் வருகிறது. அதில் அவர் உன் மனைவி மோகினி வீட்டில் இருக்கிறார் என்று கூறுகிறார். உடனே வீட்டிற்கு சென்று தேடுகிறார். அங்கும் மோகினி கிடைக்கவில்லை. பிறகு ‘எக்ஸ்’ போன் செய்கிறார். மோகினி காணாமல் போனது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று அழைக்கிறார்.
அதன்படி ராமும் எக்ஸை பார்க்க செல்கிறார். இருவரும் போட்டில் சென்று ஒரு காட்டுப்பகுதிக்கு செல்கிறார்கள். காட்டில் ராமை விட்டு ‘எக்ஸ்’ பிரிந்து செல்கிறார். அப்போது மோகினியை ஒருவர் அழைத்து செல்வதை பார்க்கிறார் ராம். அவரிடம் சென்று மோகினியை விடுவிக்க கேட்கிறார். அதற்கு அவர் மறுக்கிறார். தன்னுடன் வா என்று ராம் மோகினியை அழைக்கிறார். மோகினியும் ராம் யார் என்று தெரியாத நிலையில் பித்துபிடித்தது போல் இருக்கிறார். பிறகு அந்த நபர் ராமை அடித்து விட்டு மோகினியை அழைத்து செல்கிறார்.
அந்த காட்டுப்பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் ‘எக்ஸ்’ தான் உன் மனைவி மோகினியை கடத்தி வைத்திருப்பதாக ராமிடம் கூறுகிறார். இதனால் கோபமடையும் ராம், எக்ஸ் தேடி கண்டுபிடித்து மோகினியை மீட்க செல்கிறார்.
இறுதியில் எக்ஸிடம் இருந்து மோகினியை ராம் மீட்டாரா? இருவரும் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவர் செய்யும் செய்கைகள் கோமாளித்தனமாக இருக்கிறது. படத்தில் அனைத்து காட்சிகளிலும் இவரே ஆக்கிரமித்துள்ளார். காணாமல் போன மனைவி தேடும் இவருடைய நடிப்பு எதார்த்த மீறலாக இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஆதிராவிற்கு படத்தில் வேலையே இல்லை. பாடலுக்கு மட்டும் வந்து செல்கிறார். துப்பறியும் நிபுணராக நடித்திருக்கும் ‘எக்ஸ்’ என்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கே.என்.பைஜு, அதில் திகில், மர்மம் கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைக்கவும் செய்திருக்கிறார். இதில் ஒளிப்பதிவை மட்டுமே பாராட்ட முடிகிறது. இவருடைய ஒளிப்பதிவில் காடுகள், மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார். இவருடைய இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
கதை, திரைக்கதையில் வலுவில்லாமல் இருக்கிறது. படத்தில் தேவையற்ற இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள், பொருந்தாத வசனங்கள் என்று வைத்திருக்கிறார். சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘யாரோ ஒருவன்’ இனம் புரியாதவன்.

Post a Comment