0
லிங்கா தயாரித்த அதே நிறுவனமான “ஈராஸ் இன்டர்நேஷனல்” தான் “கோச்சடையான்” படத்தையும் ரிலீஸ் செய்தது….

‘கோச்சடையானில்” நட்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட வேண்டும் என்பது “அக்ரிமெண்ட்”. அதில் நட்டம் என்றதால், நடிகராக திரு.ரஜினியும், கதை கொடுத்த திரு.ரவிக்குமாரும் பொறுப்பாளர்கள் ஆகிவிட்டார்கள்.

அதனால் குறுகிய காலத்தில் நட்டத்தை பொறுப்பேற்பதில் இருந்து விடுபட வேண்டுமென உருவானதுதான் “லிங்கா” என்று திரைத்துறை சார்ந்த நண்பர் இன்று சொன்னார். மகளுக்காக ரிஸ்க் எடுத்த தகப்பனாக திரு.ரஜினி மனம் கவர்கிறார். உடல்நலம் பாதிக்கப் பட்டிருக்கும்போதும் நடித்தும், அவர் உடல்நலம் கெடாமல் குறைந்தபட்ச ஷெட்யூல் திட்டமிட்ட இயக்குநரும் மனம் கவர்கிறார்கள். (நண்பேண்டா)

வியாபாரம் என்பதற்க்கும், அதை சார்ந்த அரசியல் என்பதற்கும், கார்ப்பரேட் பாலிசிகளும், சூப்பர் ஸ்டாராக இருந்தால் கூட அசைத்துவிடும் என்ற உண்மையை உணர்வோம்.

அதே நிறுவனம்தான் “ராஞ்சனா” என்று திரு.தனுஷ் நடித்த ஹிந்தி படத்தில் ரூ 100 கோடிக்கும் மேல் லாபம் பார்த்தது என்பது உப தகவல்.

”நம்பியவர்களுக்காகவும் / பிள்ளைகளுக்காகவும் “ வாழ்தல் என்பது கடினம் என்று உணர்ந்த தினம் இன்று.

Post a Comment

 
Top