0
 தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ‘ஐ’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரு படங்களின் இசை உரிமையைப் பெற்றது சோனி நிறுவனம்.
அதைத்தொடர்ந்து தற்போது வரிசையாக தமிழில் அடுத்தடுத்த முக்கியத்துவம் வாய்ந்த படங்களின் இசை உரிமைகளைப் பெற்றுள்ளது.


'ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அனேகன்’ மற்றும் ‘என்னை அறிந்தால்’. அதே போல் இமான் இசையில் ’கயல்’, ‘வெள்ளக்கார துரை’, மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ படங்களின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

’கோச்சடையான்’, ‘கத்தி’ , ‘லிங்கா’ என ஈராஸ் நிறுவனம் நேரடி தமிழ் இசை உரிமங்களை பெற துவங்கிய நிலையில், இப்போது இவ்விரு நிறுவனத்திற்கும் இடையில் தமிழ் மொழியிலும் போட்டிகள் அதிகரிக்கத் துவங்கிவிட்டன.

இதற்கு முன்பு இந்தியில் மட்டுமே நேரடியாக இசை உரிமத்தில் கடும் போட்டிகள் நிலவிய நிலையில் இப்போது தமிழிலும் இந்தப்போட்டி துவங்கியுள்ளது.

Post a Comment

 
Top