0
ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் நாளை தொடங்கி ஒரு வாரத்துக்குக் கொண்டாடுகின்றனர்.

கே.கே. நகர் பகுதி ரஜினி மன்றம் சார்பில் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஓம் சேர்மா திருமண மண்டபத்தில் 200 பேர் ரத்ததானம் செய்கிறார்கள். 250 பேர் கண் தானம் செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ரஜினி பிறந்த நாள்... ஒருவார கொண்டாட்டம் ஆரம்பம்!

சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர். நடிகர் டெல்லி கணேஷ் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைக்கிறார்.

சைதை ரசிகர்கள்

சைதை ரசிகர் மன்றம் சார்பில் ரத்த முகாமுக்கு சைதை ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை இந்த முகாம் நடக்கிறது.

செனாய் நகரில்

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு செனாய் நகரில் ரஜினி டில்லி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு ஏழைகளுக்கு இலவச தையல் எந்திரம், சேலை, பாட புத்தகம், இனிப்புகள் வழங்கப்படுகின்றன. பாரதீய ஜனதா வர்த்தக அணி துணை தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் இதில் பங்கேற்று ஏழை பெண்களுக்கு புடவைகள் வழங்குகிறார்.

அம்பத்தூர்

அம்பத்தூர் ஐ.அப்துல் தலைமையில் அம்பத்தூரில் வருகிற 12-ந்தேதி குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

பொன்னேரி

திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பொன்னேரி சேகர் தலைமையில் மீஞ்சூர் பொன்னேரி ஒன்றியங்கள் சார்பில் 12-ந்தேதி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

திருப்பதியில்...

நியூஸ் பேப்பர் சீனு தலைமையில் தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

வெளிநாடுகளில்

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரசிகர்களும் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

Post a Comment

 
Top