0
அஜீத்தின் என்னை அறிந்தால் பட டீஸர் ஹ்ரித்திக் ரோஷனின் ஹிந்திப் படமான Bang Bang பட டீஸர் சாதனையை முறியடித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. டீஸர் வெளியான 32 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.
என்னை அறிந்தால் – Teaser

மேலும் ட்விட்டரிலும் ‪#‎MostLikedIndianTeaserYennaiArindhaal‬ #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக டிரெண்ட் ஆனது.

என்னை அறிந்தால் டீஸரை இதுவரை 80 ஆயிரம் பேர் யூடியூப்பில் லைக் செய்துள்ளனர். இது ரித்திக் ரோஷனின் Bang Bang பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

Bang Bang டீஸருக்கு யூ டியூப்பில் 61 ஆயிரத்து 429 லைக்குகள் கிடைத்தன.

அத்துடன் இதுவரை என்னை அறிந்தால் டீசரை 3.7 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்.

ஹிந்திப் பட டீஸர் வெளியானால் அதை இத்தனை பேர் பார்த்தனர், அத்தனை பேர் பார்த்தனர் என்று செய்திகள் வரும். ஆனால் தற்போது முதன்முறையாக பொலிவுட்காரர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்னை அறிந்தால் டீஸர்.

என்னை அறிந்தால் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று வெளிவந்த என்னை அறிந்தால் பட ஒற்றைப்பாடல் ‘அதாரு உதாரு’ இப்போது பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

Post a Comment

 
Top