0
கோடை காலத்தில் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்லும் பட குழுவினர் குளிர் காலத்தில்   உஷ்ண சீதோஷணத்தை தேடி அலைகிறார்கள். ‘நான் ஈ' பட ஹீரோ நானி தற்போது தெலுங்கில் ‘எவடே சுப்ரமண்யம்‘ படத்தில் நடித்து வருகிறார்.

 இதன் படப்பிடிப்பு இமயமலையில் 40 நாட்கள் நடக்கிறது. இதற்காக பட குழுவுடன் புறப்பட்டு சென்ற நானி 20 நாட்கள் ஆகியும் குடும்பத்தினருடன் செல்போனில்கூட தொடர்பு கொள்ளவில்லையாம். நானிக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று அவர்கள் பயந்துவிட்டனர்.

இப்படிக்கூடவா செய்வீர்கள் என்று நானியிடம் கேட்டதற்கு, ‘அதை ஏன் கேட்கிறீர்கள். இமயமலையில் 5300 மீட்டர் உயரத்தில் படப்பிடிப்புக்கு சென்றேன். என் வாய், வயிற்றுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் அளவுக்கு குளிரில் நடுங்கிவிட்டேன்.

இங்கு வந்தபிறகுதான் எதற்காக யாருமே இங்கு ஷூட்டிங் நடத்த வருவதில்லை என்பது புரிந்தது. வந்து 20 நாட்கள் ஆகிவிட்டது. என் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தைகூட இதுவரை பேச முடியவில்லை. செல்போன் சிக்னலே இல்லை பிறகு எப்படி பேசுவது.

வேகவைத்த அரிசி, உருளைகிழங்கு, பருப்பு, கோஸ் சாப்பிட்டு நாக்கும் செத்துப்போச்சு. மின்வசதி கிடையாது. பாத்ரூம் கிடையாது. சுடுநீரில் குளிப்பதுதான் அங்கு அதிக செலவு ஐட்டம் என புலம்பி தள்ளிவிட்டார்.

Post a Comment

 
Top