சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் பகிரப்படுவது இன்று அதிகளவில் இடம்பெறுகின்றது.
இவற்றில் வீடியோக்கள் பல்வேறு வகையான சாதனங்களைக் கொண்டு பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு வெவ்வேறு சாதனங்களின் உதவியினூடாக பதிவு செய்யப்படுவதனால் அவற்றின் தரம் மாறுபடுகின்றது.
இதனால் Google+
இல் பதிவேற்றப்படும் வீடியோக்களின் தரத்தினை வெளிச்சம், கலர்
போன்றவற்றினூடாக மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வசதியினை ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
Android, Windows, Mac மற்றும் Chrome OS ஆகிய இயங்குதளங்களில் Google+ இனைப் பயன்படுத்தும்போது இவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் இவ்வசதி நேரடியாக தரப்படாமையினால் பயனர்கள் தாமாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
Post a Comment