0
 லிங்கா வெளியான இரண்டாவது நாளே திருட்டு டிவிடிகள் வலம்வர ஆரம்பித்தன. ஆந்திர போலீஸார் ஒரே நபரிடமிருந்து 3000 லிங்கா திருட்டு டிவிடிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த செய்தியால் லிங்கா யூனிட் அலார்ட் ஆகியுள்ளது. சென்னை பர்மா பஜாரிலும் லிங்கா திருட்டு டிவிடி விற்கப்படுகிறது. ஒரு டிவிடியின் விலை 100 ரூபாய்.

திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் உரிமம் பெறாத திருட்டு சி.டி.க்கள் தமிழகமெங்கும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் ரசிக கண்மணிகளாகிய நீங்கள் அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்குமாறு சட்டப்படி நடவடிக்கை எடுத்து லிங்கா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

Post a Comment

 
Top