0
ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் அவர் வருவார், வரமாட்டார் என்கிற சர்ச்சை மட்டும் அடிக்கடி கிளம்பும்.

லிங்கா படத்தின் ஆடியோ பங்ஷனிலும் ரஜினியை அரசியலுக்குள் வரச்சொல்லி டைரக்டர்கள் அமீர், சேரன் உள்ளிட்டவர்கள் உசுப்பேத்தி விட அதே மேடையில் அரசியலுக்கு வர எனக்கு பயமில்லை, கொஞ்சம் தயக்கம் இருக்கு என்றார் ரஜினி.

இதுபோதாதா ஈ.வி.கே.எஸ் முதல் எல்லா அரசியல் தலைவர்களும் ரஜினியின் இந்தப் பதிலுக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது லிங்கா படத்தை ஓட வைப்பதற்கான தந்திரம் என்பது தான் ரஜினியின் இந்தப் பதிலுக்கு பதில் சொல்பவர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

அவர்களின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் லிங்கா பட டைரக்டரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கே.எஸ்.ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :

”நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்ல தான் பார்ப்பாங்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே!

அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே. தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி சார் என்னைக்கும் இருந்தது இல்லை. ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’னு அமிதாப்பச்சனே சொல்லியிருக்கார்.

இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!” என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

ரஜினி சும்மா இருந்தாலும் இவிங்க சும்மா இருக்க மாட்டாய்ங்க போலிருக்கு…

Post a Comment

 
Top