0
காதலிக்கும் போது பூ கொடுப்பார்கள்... அழகான பரிசு கொடுப்பார்கள் ஆனால் துப்பாக்கியை காட்டி மிரட்டி காதலிக்கிறான் கதாநாயகன். பகடை பகடை என்ற படத்தில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இது காமெடி படம் என்று கூறினாலும் போட்டோக்களைப் பார்த்தால் சீரியஸ் படம் போலவே தெரிகிறது.

சூர்யா, ஜோதிகாவை வைத்து ‘பேரழகன்' படத்தை இயக்கிய சசிசங்கர் இயக்கும் படம் ‘பகடை பகடை'. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள திலீப் குமார்தான் இந்த படத்தின் நாயகன். திவ்யா சிங் நாயகியாக நடிக்கிறார்.

பகடை... பகடை... மிரட்டும் நாயகன்! மிரளும் நாயகி!!

 

வில்லனாக நடித்து ஹீரோ

ஜெயம் படத்தில் சிறு வயது வில்லனாக நடித்தேன். குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த கடைசிப் படமும் அதுதான் என்கிறார் திலீப் குமார்.

நகைச்சுவை உணர்வு

சசிசங்கரின் ‘ஸ்டெப்ஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும்போதுதான் இந்தக் கதையைச் சொன்னார். சசி சார் அடிப்படையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று பாராட்டுகிறார் ஹீரோ.

ஆக்சனா? காமெடியா?

முழு நீள நகைச்சுவைப் படம் என்று ஒரு சாரார் கூறினாலும், ஆக்ஸன் கலந்த திரில்லர் கதை என்கின்றனர்.

கதாநாயகிக்கான கதை

இதில் நாயகியை மையமாக வைத்துதான் முழுக்கதையும் நகர்கிறதாம். அப்புறம் எதுக்கு துப்பாக்கியைக் காட்டி கதாநாயகியை மிரட்டுகிறார் என்று தெரியவில்லை.

நகைச்சுவை படம்

பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார் கதாநாயகன். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபடுகிறார். அந்த முயற்சிகள் சாதகமாக அமைகிறதா? அவரால்தான் நினைத்ததை சாதிக்க முடிகிறதா? என்பதை காட்சிக்கு காட்சி நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்களாம்.

அரசியல்வாதி சரளா

இந்தப் படத்தில் ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: தமிழமுதன், பால்முகில். வசனம், வி.பிரபாகர். இயக்கம், சசிசங்கர். கோவை சரளா இந்தப் படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறாராம்.

Post a Comment

 
Top