சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு ஜோக் பரவி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனிமேஷன் திரைப்படமாக இந்த ஆண்டு மே 23ம்தேதி வெளியானது கோச்சடையான். ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். சுமார் 125 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருநாள் முழுக்க தியேட்டரில் உட்கார்ந்திருந்ததை போல உணர்ந்ததாக புலம்பினர்.
கோச்சடையான் பார்த்து காசை வேஸ்ட் பண்ணிய ரசிகர்களுக்கு 'லிங்கா' கட்டணத்தில் தள்ளுபடி?
பாபா, குசேலன் வரிசையில் கோச்சடையானும் சேர்ந்தது ரஜினி ரசிகர்களுக்கு சோகமே. ஆனால் குசேலனில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்தார் என்றும், கோச்சடையான் அனிமேஷன் படம் என்றும் கூறி சமாளித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில்தான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இது வழக்கமான சூப்பர் ஸ்டார் பட மசாலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் மினிமம் கியாரண்டிக்கு பாதிப்பிருக்காது என்பது தயாரிப்பாளர்கள் எண்ணம். ஆனால் ரசிகர்களுக்கோ, கோச்சடையானை பார்த்ததில் இருந்து சூடுள்ள பால் டம்ளரில் வாய் வைத்த பூனை நிலைமை. எனவேதான் சிவாஜி, எந்திரனுக்கு இருந்த 'ஹைப்' லிங்காவுக்கு கிடைக்காமல் போயுள்ளது.
இதைமுன்வைத்துதான் ஒரு ஜோக் இணையத்தில் பரவி வருகிறது. அது இதுதான்: "கோச்சடையான் படம் பார்த்தவர்களுக்கு லிங்கா பட டிக்கெட்டில் டிஸ்கவுண்ட் தருவார்களா" என்பதுதான் அந்த கேலி கேள்வி.
கோச்சடையானுக்கும் ரஜினி படத்திற்கே உரிய கட்டணம்தான் வசூலிக்கப்பட்டது. ஆனால் கையில் சூடுபட்டது என்னவோ ரசிகர்கள்தான். எனவே அந்த கணக்கை லிங்காவில் சரிகட்ட வேண்டாமா? என்பதுதான் கோச்சடையான் பார்த்து குழம்பி திரியும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Post a Comment