Wednesday, 10 December 2014

கமலின் உத்தமவில்லனை வெளியிடவுள்ள நிறுவனம் பரபரப்புத் தகவல்

 இந்தியில் கோலோச்சி வந்த ஈரோஸ் இன்டர்நேஷனல் இப்போது தமிழிலும் தனது கவனத்தை செலுத்துகிறது. கோச்சடையான், லிங்கா என மெகா பட்ஜெட் படங்களை தொடர்ந்து அந்நிறுவனம் தற்போது உத்தம வில்லனில் தனது கவனத்தை பதித்துள்ளது.


கமல் இரு வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸ். தயாரிப்பு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்.

படத்தை விநியோகிக்க ஈரோஸ் இன்டர்நேஷனல்ஸுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது திருப்பதி பிரதர்ஸ். இதனை தனது பேட்டியில் லிங்குசாமியும் உறுதி செய்துள்ளார்.

No comments:

Post a Comment