Wednesday, 3 December 2014

அஜித் எடுத்த திடீர் முடிவு ! அதிர்ச்சியில் திரையுலகினர் !!

 சிறுத்தை சிவாவின் படத்திற்காக உடல் எடையை குறைக்க அஜீத் சைவத்திற்கு மாறியுள்ளார்.

அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் டீஸர் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தில் நடிக்க அஜீத் தனது உடல் எடையை குறைத்து கும்மென்று ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் தன்னை வைத்து வீரம் படத்தை எடுத்த சிவாவின் இயக்கத்தில் மீண்டும்நடிக்கிறார்.

அந்த படத்தில் அஜீத் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் மூன்று வேலையும் காய்கறிகள், பழங்களை தான்சாப்பிடுகிறாராம். சைவத்திற்கு மாறியுள்ள அஜீத் தற்போதே 3 கிலோ எடையை குறைத்துள்ளாராம்.

பூசினாற் போல் இருந்த அஜீத் கௌதமுக்காக கும்மென்று ஆனார். தற்போது சிவாவுக்காக ஒல்லியாகிறார். உடல்எடையை ஏற்றுவதும், குறைப்பதும் அஜீத்துக்கு ஒன்றும் புதிதன்று.


அஜித்தின் இந்த முடிவால் அவரது கையால் பிரியாணி சமைத்து வயறார சாபிட்ட பட குழுவினர் வடபோச்சே... என்று ஏக்கத்தில் உள்ளனர்...

No comments:

Post a Comment