Wednesday, 3 December 2014

கௌதமின் அன்புசெல்வன், ராகவன் வரிசையில் சத்யதேவ் ஐபிஎஸ்

கௌதம் படங்களின் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவை. காக்க காக்க படத்தில் சூர்யா நடித்த அன்புசெல்வன் கதாபாத்திரமும், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கமலின் ராகவன் கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் பதிந்து போனவை.

அந்த வரிசையில் வருகிறது, என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தின் சத்யதேவ் ஐபிஎஸ் கதாபாத்திரம்.
கௌதமின் இந்தப் படத்தில் அஜீத்தின் கதாபாத்திர பெயர் சத்யா என்று முன்னமே செய்தி வெளியானது. கமலின் சத்யா படத்தின் தீவிர ரசிகர் கௌதம். அதனால் படத்துக்கும் சத்யா என்று பெயர் வைக்கலாம் என்ற யோசனையை அஜீத் மறுத்தார். முதலாவதாக அது கமல் நடித்த படத்தின் பெயர். இரண்டாவது, தனது கதாபாத்திர பெயரை படத்தின் பெயராக வைக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு. கடைசியில் என்னை அறிந்தால் பெயர் முடிவானது.

இந்தப் படத்தில் சத்யதேவ் ஐபிஎஸ்சாக நடிக்கிறார் அஜீத். அன்புசெல்வன், ராகவன் வரிசையில் சத்யதேவும் இடம்பிடிப்பார் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment