Wednesday, 10 December 2014

நடிகை அஞ்சலியை திருமணம் செய்துகொண்டாரா சதீஸ்?

 கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி. இவர் சில நாட்களுக்கு முன் தன் சித்தி கொடுமையால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
பின் அந்த பிரச்சனைகள் முடிந்தவுடன் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக ஆந்திரா தொழில் அதிபரை காதலிக்கிறார் என்று ஒரு வதந்தி இருந்தது.

ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி தானாம், இன்று சென்னையில் நடந்த வை ராஜா வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிலர் நடிகை அஞ்சலி, காமெடி நடிகர் சதீஸை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என பேசியுள்ளனர்.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை. இது குறித்து சதீஸிடம் பேச முயன்ற போது அவர் ஏதும் சொல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment