Wednesday, 10 December 2014

பயனர்களுக்காக கூகுள் வழங்கவிருக்கும் புதிய வசதி

இணைய ஜாம்பவானான கூகுள் விளம்பரங்கள் மூலம் வருடாந்தம் 27 பில்லியன் பவுண்ட்ஸ்களை வருமானமாகப் பெற்று வருகின்றது.
எனினும் இவ்விளம்பரங்களால் பயனர்கள் சில சமயங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு விளம்பரம் அற்ற இணைய சேவையினையும் வழங்க தீர்மானித்துள்ளது.

இச்சேவையைப் பெற விரும்பும் பயனர்கள் மாதாந்தம் 2 பவுண்ட்ஸ்களுக்கும் குறைவான தொகையினை கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனினும் தற்போது விளம்பரங்களை தடைசெய்வதற்காக AdBlock Plus போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment